ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன்

0

 நூல் :  ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை 

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்





நான் புக்கை வாசித்து முடித்ததே சுமார் நான்கு மணி நேர கார் பயணத்தில் மலைகளை ரசித்து கொண்டே my favorite sound track ah போட்டு தெறிக்கவிட்டு சிறப்பாக நா எதிர்பாக்காத வகையில் அதி அற்புதமாக முடிந்தது. ஏனெனில் சிறிது திராபையாக இருக்குமோ என எதிர்பார்த்தேன் ஆனால் நன்றாகவே இருந்தது.

பெண்களை பற்றிய நிறைய சந்தேகங்களை கமலாதாஸ் விளக்கிவிட்டார் ஒன்னு ரெண்டு மிஸ் ஆகியிருந்ததை இந்த ஆசிரியர் எடுத்து கூறிவிட்டார் . அது என்னவென்றால் யாரும் யாரையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது, முயற்சி செய்தாலும் அது நிறைவேறாது ஆகவே இருவரும் சேர்ந்து சுப்பி மற்றும் சில்வியா போல வாழ்கையை மஜா பண்ணுங்க. கூடவே ஜான்சி போன்ற பிள்ளைகள் எல்லாம் அசல் தேவதை அதனால் சந்தோசமாக வாழ்கையை நகத்தலாம்.

As a general audience ah சில்வியாவை பாக்குறப்ப என்ன ஆட்டம் போட்ட பாத்திய இப்ப இந்த நிலைமையில இருக்கனு தோனுது.( சிறிதளவு வன்மம் )

புத்தி தெளிவா இருக்குறப்ப எத்தனை காதல் வந்தாலும் ஸ்கூல்ல வர காதல் மாதிரி அந்தளவுக்கு ஆழமா மனசுக்குள்ள பதிஞ்சு கட்டையில போற வரைக்கும் பழி வாங்குற first love bastardக்கு நிகராக எதுவும் கிடையாது என அடித்து சொல்வேன்.

என்னதான் ஒரு ஆண் ஒரு பெண்ணை கிஸ் பண்ணுனாலும் அந்த பெண் அவளாக வந்து ஆணிடம் கிஸ் தருவது போல உலகில் வேறெந்த இன்பமும் கிடையாது நண்பர்களே.
 நான் எந்த நிலையில் இருந்தாலும் என்னை சுக்கு நூறாக உடைப்பது எதிர்பாக்காத முதல் முத்தம்...இதழ் மேல் இதழ் வைத்து.....

" எத்தனை பிரச்சனை வந்தாலும் கூட நிக்குறதுக்கு ஒரு ஆள் இருந்தா போதும் ஏற்கனவே இருக்குற பிரச்சனையை விட பல மடங்கு பிரச்சனை வந்தாலும் தாங்கலாம் தட்டி தூக்கலாம். "


credit : தமிழ் புத்தக விமர்சனம்

Post a Comment

0Comments
Post a Comment (0)