அரசு
பள்ளி மாணவர் கலை விழா பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி.
அரசு மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாக துவங்கியது.
தமிழ்நாடு
முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை வடிவங்களை அறிமுகப்படுத்தவும், மாணவர்களின்
கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரவும் பள்ளிக் கல்வி துறை சார்பில் செயல்பாடுகளின்
ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஊக்குவித்து வரப்படுகிறது. இந்நிலையில்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கலை பயிற்சிகளும்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கலை திருவிழா போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி
மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில்
மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகள்
இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி அவர்கள்,
பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு,
மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலைப்போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்களிடையே கூறியதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது மண்ணின் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை, கலைப்பண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கலைகளை கற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்து வருகிறார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். கலைச் செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய சூழலை உருவாக்குவதோடு, பிற கற்றல் செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்புடனும், ஆர்வமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை
கற்றுக்கொள்வதால் அவர்களை சுற்றியுள்ள உலகத்தை பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிட்டு, இவ்வாண்டும் அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழாப் போட்டிகள் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும். எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் திறமையை அறிந்து அவற்றை வெளிகொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பிற குழந்தைகளோடு ஒப்பிடாமல் தனித்துவமானவர்களாக விளங்கிட பெற்றோரும் ஆசிரியர்களும் துணை புரிய வேண்டும்.
எந்தவொரு மாணவ மாணவியும் சிறந்தவர்களாக திகழ்வதில் அவர்களது பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் முழு பங்கு உண்டு. பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் கலைத்திருவிழாவில் தமிழ்நாட்டிற்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 24 இட்சம் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறனை வெளிபடுத்த உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி
மாவட்ட அளவில் 26.10.2023 முதல் 28.10.2023 வரையிலும் நடைபெறவுள்ளது.
கலைத்திருவிழாப் போட்டிகள் 6 முதல் 8 ம் வகுப்பு, 9 மற்றும் 10ம் வகுப்பு,
11 மற்றும் 12ம் வகுப்பு மூன்று பிரிவுகளில் இசை வாய்ப்பாட்டு,
இசைச் சங்கமம், கருவி இசை, தந்திக் கருவிகள், துளை - காற்றுக்
கருவிகள், தோற் கருவி, கவின்கலை,
நுண்கலை, நடனம் நாடகம், மொழித்திறன்
ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.
இதில்
மொத்தம் 4.501 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம்
பிடிப்பவர்கள்,
மாநில அளவிலான போட் டிக்கு தகுதி பெறுவார்கள். மாநில அளவில் நடைபெறும்
போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும்,
மாணவிகளுக்கு கலையரசி விருதும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.