நாகர்கோவில், ஜூன் 29
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஜூன் 29) இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் புதன்கிமை (ஜூன் 28) பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். இன்னொரு பிரிவினர் வியாழக்கிழமை காலையிலேயே சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளி வாசலில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். திருவிதாங்கோடு பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட ஆட்டு சந்தைகளில் புதன்கிழமை விற்பனை களைகட்டியுள்ளது.